Rock Fort Times
Online News

ஒடிசா ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று ஐஏஎஸ் அதிகாரி பணிந்திரரெட்டி தெரிவித்துள்ளார்…

ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே நடந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 291 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்று ரயில்வே சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதனிடையே நேற்று காலை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர் உட்பட அதிகாரிகள் ஒடிசா சென்றனர்.  விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அவர்களை மீட்டு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணிகளை ஒருங்கிணைக்க ஒடிசா சென்றுள்ளனர்.  அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்த ரெட்டி ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகளை கண்காணித்து உதவி வந்தனர். மற்றொரு குழு ஐஏஎஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த் அர்ச்சனா பட்டினக் ஆகியோர் ஒடிசாவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்களை சேகரித்து வந்தனர்.  இந்நிலையில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இருந்த தமிழர்கள் 11 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஒடிசாவில் உள்ள தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 296 பேரில் 160 பேரின் அடையாளம் தற்போது வரை தெரியவில்லை அதே நேரம் 11 தமிழ்நாட்டு குடும்பத்தினர் அவர்களது உறவினர்களை தேடி வருகின்றனர் இவர்களை ஒருங்கிணைக்க இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு அரசு குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்