திருச்சி உதவி கலெக்டராக பணியாற்றி வரும் கோ. தவச்செல்வத்துக்கு பதிலாக மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரா.பார்த்திபன் உதவி கலெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று லால்குடி உதவி கலெக்டர் வைத்தியநாதனுக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியனும், முசிறி உதவி கலெக்டர் மாதவனுக்கு பதிலாக சென்னை கன்னியாகுமரி தொழில்நுட்பத் திட்டம் மறுபகிர்மான அலுவலர் ராஜன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவரங்கத்தில் காலியாக இருக்கக்கூடிய உதவி கலெக்டர் பணியிடத்திற்கு கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் பிறப்பித்துள்ளார். இதேபோன்று தமிழக முழுவதும் மொத்தம் 25 இடங்களில் புதிய உதவி கலெக்டர்கள் நியமிக்கப்பட்
Comments are closed, but trackbacks and pingbacks are open.