Rock Fort Times
Online News

17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(செப்.17) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்:* 20-ம் தேதி வரை கட்டண தரிசனம் இல்லை…!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின் நாளை(17-09-2026) நடக்கிறது. நாளை காலை 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்கள் ஒரே நேரத்தில் மேல்தளத்தில் இருந்து கீழே வருவதை தவிர்க்க, பகுதி பகுதியாக விடப்பட உள்ளனர். இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தன்று துாய்மை பணிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து 1,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கீழவெளிவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக ஐந்து தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனை சார்பில், செப்., 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செப்., 17 முதல் 20 வரை, கட்டண தரிசனம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்