சுதந்திர போராட்ட தியாகி அருணாச்சலம் பிள்ளையின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மெயின் கார்டுகேட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு தியாகி அருணாச்சலம் பிள்ளையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,
மத்திய மாவட்ட, திமுக செயலாளர் வைரமணி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முன்னாள் வட்ட செயலாளர் சிந்தை பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் கள்ளத்தெரு குமார், தென்னூர் மெய்ய நாதன், வெள்ளமண்டி பாலசுப்ரமணியன், சிறுபான்மை பிரிவு பஜார்மைதீன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ஹேமா, சேவாதளம் மாவட்ட தலைவர் மலைக்கோட்டை முரளி, ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, சந்துகடை சம்சுதீன், மாவட்ட பொது செயலாளர் கள்ளிக்குடி குமார், பட்டதாரி அணி பீம நகர் ரியாஸ், வழக்கறிஞர் பிரிவு வனஜா சுப்ரமணியன், சுகன்யா, மாரிமுத்து, முருகன், ஜிம் விக்கி, கலை பிரிவு மாவட்ட தலைவர் தியாகி பேரன் ராகவேந்திரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
அவனைத்தொடர்ந்து அருணாசலம் மன்றத்தின் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.