Rock Fort Times
Online News

தவெக அமைச்சரவையில் இடம்பெறுகிறது காங்கிரஸ்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அந்த கட்சியின் தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக 107 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க இயலாது என்பதால் பிற கட்சிகள் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு நேரில் சென்று வலியுறுத்தப்பட்டது. இதன் பயனாக 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ், 2 உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2 உறுப்பினர்களை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2 உறுப்பினர்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம் பெரும்பான்மை பெற்ற விஜய், முதல்- அமைச்சராக அரியணை ஏறினார். இந்தநிலையில் ஆட்சியமைக்க தங்களுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில்
இடம் கொடுக்க விஜய் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ்நாடு காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உறுதிப்படுத்தி உள்ளார். காங்கிரசுக்கு ஒன்று அல்லது இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்