திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது, அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுகுமார், தன்னுடைய செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு, தொடர்ந்து ஆபாசமாக வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்புவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் ஒருவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களையும் அந்த பெண் சந்தித்தார். அப்போது இன்ஸ்பெக்டர் சுகுமார் பற்றிய செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முறையான பதிலை அந்த பெண் தெரிவிக்காமல் ஏதேதோ மாற்றி, மாற்றி கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சுகுமார் மீது வேண்டுமென்றே, அந்த பெண் பொய் புகார் கூறுவதாக, தற்போது ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்பெக்டர் சுகுமாரை பொறுத்தவரை திருச்சி மாநகர காவல்துறையில் ஆக்டிவாக செயல்படும் அதிகாரிகளில் ஒருவர்.
இதன் காரணமாகவே கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடும் கயவர்கள், கஞ்சா, லாட்டரி, சீட்டு கிளப் ஆகியவற்றை நடத்தும் சமூக விரோதிகள் அனைவரும், இன்ஸ்பெக்டர் சுகுமாரை கண்டு அஞ்சி நடுங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியென்றால் இன்ஸ்பெக்டர் மீது கூறப்பட்டது பொய் புகாரா ? அதன் பிண்ணனி என்ன ? என்பது குறித்து உளவுபிரிவினர் விசாரித்துவருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.