கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வருகிற ஜூலை 13-ந்தேதி சமுதாய மாநாடு… * ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி- தஞ்சை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 23) நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து வேளாளர் உட்பிரிவு சங்கத்தை சேர்த்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மத்திய அரசு எடுக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள வேளாளர் உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து வேளாளர் (வெள்ளாளர்) என்ற ஒரே பெயரின் கீழ் பதிவு செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பது. அரசாங்க கெசட்டில் தற்பொழுது தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ள வேளாளர் உட்பிரிவுகளை, வேளாளர் (வெள்ளாளர்) என்ற பொது பெயரில் மாற்றி அரசாணை வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது. வேளாளர்களுக்கு என்று தனி வேளாளர் நல வாரியம் அமைக்க அரசை கேட்டுக் கொள்வது. நமது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த வருகிற ஜூலை 13 ந்தேதி அன்று அரசியல் சார்பற்ற வேளாளர் (வெள்ளாளர்) சமுதாய மாநாட்டை திருச்சியில் நடத்தவது. மாநாட்டில் அனைத்து வேளாளர் (வெள்ளாளர்) உட்பிரிவு சங்ங்களும், அமைப்புகளும் அரசியல் சார்பற்று கலந்து கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள மண்டல வாரியாக சங்கங்கள், அமைப்புகள், பிரதிநிதிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க தீர்மானிக்கப்படுகிறது. மேற்கொண்டு மத்திய ,மாநில அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்லவும், அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசியல் சார்பற்ற சமுதாய அமைப்பாகவே தொடர்ந்து இயங்குவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed.