திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், ராஜீவ்காந்தி நகர், காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது. மேலும், அதேபகுதியில் சுரங்கப்பாதை பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இன்று இந்த பணிகளை விரைந்து முடிக்க கோரி ஜே.சி.பி. எந்திரத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.