நாடு முழுவதும் வருகிற நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இருப்பினும், பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்கள் மற்றும் அமைதிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Comments are closed.