துரைமுருகன் இல்லத்தில் புரோகித முறைப்படி திருமணம்: திமுகவின் இரட்டை நிலைப்பாடுகள் இனியும் தொடரக்கூடாது…- கி.வீரமணி..!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க புரோகித முறைப்படி திருமணம் நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், துரைமுருகன் இல்லத்தில் புரோகிதத் திருமணம் நடைபெற்ற செய்தியைக் கேட்டு பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறேன். “ஒரு குடம் பாலானாலும், ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால் என்ன? பாலின் வெண்மையா பேசப்படும்? சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுக தலைவரும், கட்சியும் இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டுடன் கூடிய நடவடிக்கைகள் இனி தொடராத வகையில் கவனத்துடன் செயல்படுவதுடன், அவற்றைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.