Rock Fort Times
Online News

முசிறி கிளை நூலகத்தில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார், சட்டமன்ற உறுப்பினர் எம்.விக்னேஷ்…!

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா.பேட்டை சாலையில் உள்ள கிளை நூலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம்.விக்னேஷ் இன்று(03-11-2026) திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முசிறி சப்- கலெக்டர் சுபஸ்ரீ சுவாங்கி கந்தியா, நகராட்சி ஆணையர் பிரபு, அரசு அதிகாரிகள் மற்றும் நூலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களை சந்தித்த எம்எல்ஏ, கல்வியின் முக்கியத்துவம், வாசிப்பு பழக்கம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து ஊக்கம் அளிக்கும் வகையில் உரையாற்றினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்