செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்…
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து..
தமிழக அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, சட்ட விரோாத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது இலாகாக்கள், மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. தற்போது அவர் இலாகா இல்லாத மந்திரியாக உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இதற்கிடையே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று ( 05.09.2023 ) விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், ”செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடிக்க வேண்டும்” எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தது. மேலும், தார்மீக ரீதியாக இது சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.