தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் குறைந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று (21-05 -2024) 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல் நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.