இன்றைய காலகட்டத்தில் அதுவும் ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இந்த மொபைல் போன், கல்வி மற்றும் வர்த்தக செயல்பாட்டுக்கும் பெரிதும் உதவுகிறது. மொபைல் வைத்திருப்பவர்கள் தங்களது வசதிக்கேற்ப மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை உயர்த்திய நிலையில் தற்போது வோடஃபோன், ஐடியாவின் ‘வீ’ நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பீரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டண உயர்வு 10% முதல் 23% வரை இருக்கும் இந்த கட்டண உயர்வானது ஜூலை 4 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 நாள்களுக்கு ரூ.299 (தினம் 1.5 ஜிபி) லிருந்து ரூ. 349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 ஜிபி) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டேட்டா ஆட் ஆன் சேவைகளில் ஒருநாளைக்கு 1 ஜிபி ரூ. 19 லிருந்து ரூ. 22 ஆகவும், 3 நாளைக்கு 6 ஜிபி ரூ. 39 லிருந்து ரூ. 48 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் இன்று வோடஃபோன், ஐடியாவின் ‘வீ’ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Comments are closed.