Rock Fort Times
Online News

கவர்னரின் செயலாளர் உட்பட 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்…!

தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்றதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று( ஜூன் 2) தமிழ்நாட்டில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநரின் செயலாளராக சஜன் சிங் சவான்  நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராகவும், நிதித்துறை ஆணையராக இருந்த பிரதீவ்ராஜ் கரூர் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவக்கோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முதன்மை செயலாளராக இருந்த ஹர்மீத் சிங் பேடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த சுவாதி ஸ்ரீ, திருச்சி ஊரக முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்காட் நிறுவன செயல் இயக்குநராக இருந்த தீபனா விஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்