Rock Fort Times
Online News

திருச்சியில் காரை வழிமறித்து கத்திமுனையில் கொள்ளை- 2 வாலிபர்கள் கைது…!

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் அல்லித்தெருவை சேர்ந்தவர் ஜான் வின்சென்ட் . இவரது மகன் அகஸ்டின் நிக்கோலஸ் (வயது 37). இவர் தனக்கு சொந்தமான காரில் குடும்பத்தினருடன் காஜாபேட்டை பசுமடம் அருகில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் காரை வழிமறித்து கத்திமுனையில் நிக்கோலசிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பிரகதீஸ்வரன்(29), சதீஷ்ராஜ்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒயிட்பிரபுவை தேடி வருகின்றனர்.

புதிதாக கட்சி தொடங்கியவர் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்- விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 of 900

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்