Rock Fort Times
Online News

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது கேப்டன் விஜயகாந்தின் உடல்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து கோயம்பேட்டில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் கூட்டம் காரணமாக மிகவும் நிதானமாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் சென்றது. அதன் பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனம் விரைந்தது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இட நெருக்கடி காரணமாக அவரது உடல் தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அங்கு அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணியளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் சென்றடையும் என்று தேமுதிக அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்