Rock Fort Times
Online News

வீடுகூட நிம்மதியா கட்ட முடியலையே! திருச்சி பாலக்கரையில் இரும்புக்கம்பிகளை திருடியவர்கள் கைது!

திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 73 ). இவர் அந்தப் பகுதியில் வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகளுக்காக இரும்பு கம்பி மற்றும் பல்வேறு பொருட்களை வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த இரும்பு பைப், 20 இரும்பு ராடுகள் ஆகியவற்றை திருடி சென்றனர்.

இதுகுறித்து அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி பீமநகர் கோட்ட கொல்லை தெருவை சேர்ந்த பிரபு (26), திருச்சி மேட்டு தெரு மார்சிங்பேட்டை ஜெயராஜ் (21), திருச்சி கூனி பஜார் சவேரியார் கோவில் தெரு ஜாக்கப் ஸ்டீபன் (வயது 24), மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் தெரு அருண்குமார் (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்…

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்