திருச்சியில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குகிறது அதிமுக- 24ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் இபிஎஸ்…!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக தேர்தல் கூட்டணியை இறுதி செய்துவிட்டு வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டு திருச்சியில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குகிறது. அதன்படி, வருகிற 24 ஆம் தேதி, திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகிறார். இதற்காக வண்ணாங் கோயில் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படுகிறது. அதற்கான இடத்தை சுத்தம் செய்யும் பணி, மேடை அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
அங்கு நடைபெற்று வரும் பணிகளை திருச்சி மாவட்ட செயலாளர்கள் பா.குமார், மு.பரஞ்சோதி, ஜெ.சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தி, சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், கோப்பு நடராஜ், கடிகை மா.ராஜகோபால், எஸ்.பி முத்து கருப்பன், எல்.ஜெயக்குமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பகுதி கழக செயலாளர்கள் முஸ்தபா, ரோஜர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரசன்ன குமார், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் சாத்தனூர் வாசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் நவநீதகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கார்த்தி, புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் எட்டரை அன்பரசு, விவசாய அணி மாவட்ட தலைவர் ரங்கராஜ், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் தேவராஜ், ஒன்றிய கழக பொருளாளர் வீரமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர் வெங்கட்பிரபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் எம.கே.கதிரவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.