Rock Fort Times
Online News

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்…!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தழுகை ஊராட்சி டி. பாதர்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராணி (வயது 48).கணவன்-மனைவி இருவரும் கூலித் தொழிலாளிகள். ராணிக்கு உடல் நலக் குறைவு காரணமாக கட்ந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர். ஓ.கிருஷ்ணாபுரம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது
ராணி திடீரென நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்த ராணி மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இனி அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என தெரிந்ததும் ராணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்பேரில், அறுவை சிகிச்சை மூலம் அவரது கண்கள் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
. அவரது உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊரான டி.பாதரப்பேட்டை எடுத்துச் சென்றனர். உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி, அரசு சார்பாக துறையூர் தாசில்தார் வனஜா, ராணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்