உசிலம்பட்டி வேலன் சில்க்ஸ் திறப்பு விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு…* மாற்றி யோசித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஜி.அஜித் பாண்டி!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் ஜி.அஜித் பாண்டி. இவர் உசிலம்பட்டியில் வேலன் ஃபர்னிச்சர் என்கிற பெயரில் ஏற்கனவே ஃபர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது வேலன் சில்க்ஸ் என்கிற புதிய ஜவுளி மற்றும் ரெடிமேட் ஷோரூமை பிரமாண்டமாக ஆரம்பித்துள்ளார். இப்புதிய ஷோரூம் திறப்பு விழா நேற்று (அக்டோபர் – 23 ) நடைபெற்றது. உசிலம்பட்டி டூ வத்தலகுண்டு மெயின் ரோடு, மெய்யஞானம் பட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில், பல்வேறு கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை நிர்வாக இயக்குனர் அஜித் பாண்டி வரவேற்றார். இங்கு தீபாவளியை முன்னிட்டு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தேவையான ஆடை ரகங்கள் விதவிதமான கலெக்க்ஷன்களில், மிகக்குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். திறப்பு விழா ஆஃபராக ரூ.2000க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு அதன்படி சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், வேலன் சில்க்ஸ் திறப்பு விழாவையொட்டி உசிலம்பட்டியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களை கௌரவிக்க நினைத்த அஜித் பாண்டி, அவர்களுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கமாக உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், பிரீமியம் ஆடைகளை வாங்க வேண்டும் என்றால், மதுரை அல்லது தேனி உள்ளிட்ட அருகிலிருக்கும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையே இருந்தது. இந்நிலையில், தற்போது பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலன் சில்க்ஸில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான ஆடை ரகங்களை சிறப்புத் தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள முடியும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.