பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக அமைச்சர் தாமோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள பம்பலில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், நாங்கள் எவ்வளவோ பிரதமரை சந்தித்துள்ளோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. திமுகவை அழித்துவிடுவேன் என பிரதமர் கூறியுள்ளார். திமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சய்சய் ரஞ்சன் என்பவர் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அமைச்சர் தாமோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், திமுக அமைச்சருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.