காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய தி.மு.க.அரசை கண்டித்தும், தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க மறுக்கும் தமிழக அரசு கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் பா.ஜ.க.சார்பில் திருச்சியில் இன்று 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி சூளக்கரை மாரியம்மன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாலக்கரை மண்டல தலைவர் செல்வராஜ், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கோகுலமுருகன், விவசாய அணி தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மண்டல துணைத் தலைவர் சரவணன் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் மண்டல தலைவர் சதீஷ்குமார், மாவட்ட ராணுவ பிரிவு தலைவர் நடராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் தாயார் மணி, வார்டு தலைவர் மாலுச்சாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் திருச்சி மாநகரில் வார்டுகள் வாரியாக அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மேலும் அந்த நல்லூர், மணிகண்டம் ஒன்றியங்களிலும் பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது .மொத்தம் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.