முஸ்லிம் சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான பொள்ளாச்சியை சேர்ந்த பழனிபாபா கடந்த 1997 ஜனவரி 28ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பழனிபாபா நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 28ஆம் தேதி அவரது ஆதரவாளர்களால் கடை பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், பழனி பாபா நினைவு தினமான நேற்று பழனி பாபா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக திருச்சி உறையூரை சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவின் மாநில செயலாளர் புகழ் மீது உறையூர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.