Rock Fort Times
Online News

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருச்சி கலெக்டர் ஆபிஸ் முற்றுகை…

நில ஒருங்கிணைப்பு சட்டதை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கங்கள் சார்பில், தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது.அந்த வகையில் கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் விலை நிர்ணயம், சம்பா சாகுபடியை முழுமையாக முடித்து பயிர் அறுவடைக்கு உதவும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான முருகேஷை வேளாண் அதிகாரியாக நியமிக்க கூடாது. தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நெல்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7500 இழப்பீடு வழங்க வேண்டும். நீர் நிலைகளை கார்பரேட் நிறுவனங்கள் அபகரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு- பி.ஆர்.பாண்டியன் தலைமையில், மேஜர் சரவணன் நினைவிடத்தில் இருந்து ஊர்வலமாக வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யா கண்ணு மற்றும் 200 க்கு மேற்பட்ட விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்