காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது…
நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் பேட்டி..
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில் :
திருச்செங்கோட்டில் மருத்துவர், குழந்தை விற்ற சம்பவம் தமிழகத்தை வெட்கி தலை குனிய வைத்துள்ளது. மருத்துவர்கள் மீது எப்போதும் மதிப்பு மரியாதை உண்டு. ஆனாலும் மருத்துவ தர கட்டுப்பாடு மீது எனக்கு விமர்சனம் உள்ளது. தண்ணீர், கல்வி, உயிர் காக்கும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தை விற்பனை வரை வந்து விட்டது. இது முற்றிலும் தவறான செயல்
கண்டிக்கத்தக்கது என்றாா்.
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இந்தியா தனது உரிமையை இழந்து வெகு நாளாகிவிட்டது. ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆகலாம்.
ஆனால் ஏதோ ஒரு மாநிலத்திற்கு முதல்வராக முடியுமா? தமிழகத்தில் போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஆடை, சிகை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஆனால் வட மாநிலத்தவருக்கு
அது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. தேர்வில் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு தேர்வு பெறுவதால் எவ்வாறு தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்? அந்தந்த மாநில மக்களுக்கு அந்தந்த மாநில தேர்வில், பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்பப்பட்டது.
ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு?இந்தியாவின் விடுதலைக்கு கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் போராடினர். ஆனால் ஆர் எஸ் எஸ் விடுதலைக்காக போராடவில்லை.400 ஆண்டு காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் பாஜகவினருக்கு நண்பர்களாக உள்ளனர். ஆனால் நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம்களை எதிரிகளாக பார்க்கின்றனர்.
மகளிர் உரிமை குறித்து பேசும் திமுக மகளிர்க்காக என்ன செய்திருக்கிறது? நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல்களில் போட்டியிட சரி பாதி உரிமை கொடுத்துள்ளது. இது போன்ற திமுக செய்துள்ளதா? என கேள்வி எழுப்பினர். பெண்கள் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே இவ்வளவு காலம் நடத்தாத மகளிர் மாநாட்டை திமுக நடத்துகிறது என குற்றம் சாட்டினர். தமிழகத்தில் இலவசம் என்ற சொல்லே ஒழிக்கப்பட வேண்டும். வறுமை நிலை இல்லாது தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.