நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் அதிர்ச்சிகரமான தகவல்களையும் கொண்டுள்ளது . அந்த வகையில் உள்துறை மந்திரி அமித்ஷா சுமார் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி மற்றொரு பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர்லால் வானி 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் நோட்டாவுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகள் பதிவாகி இருந்தன. சங்கர்லால் வானி நோட்டாவை விட 10 லட்சத்து 8 ஆயிரத்து 77 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். நோட்டாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சய் 51 ஆயிரத்து 651 வாக்குகள் பெற்றார். இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்ஷய் காண்டி பாம் கட்சியிலிருந்து விலகி கடைசி நேரத்தில் பாஜகவில், இணைந்ததால் தேர்தலில் போட்டியிடவில்லை.இதன் காரணமாகவே பாஜக வேட்பாளர் இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.