உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டது. இதன் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரியில் நடைபெற்றது.
மக்களின் நீண்டகால கோரிக்கையான ராமர் கோவில் கனவு நிறைவேறியதால் பாஜகவிற்கு ஆதரவு பெருகியது. இது, இந்த லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவில் உபியில் பாதிக்கும் மேலான தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோவில் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் லாலு சிங்கை விட சுமார் 47 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் சமாஜ்வாடி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றியை நெருங்கியுள்ளார்.
1
of 872
Next Post
Comments are closed.