Rock Fort Times
Online News

திருச்சியில் 12 வயது சிறுமி மாயம் இரண்டு வாரங்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் மெத்தனம் காட்டும் திருவெறும்பூர் போலீஸ்…

திருச்சியில் சிறுமி ஒருவர் மாயமாகி 12 நாள்களாகியும் அவரைப் பற்றிய விவரம் ஏதும் கிடைக்காமல் பரிதவிப்புடன் தினமும் காவல் நிலையத்துக்கு கால்கடுக்க அலைந்து வருகிறார் சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். கோயம்புத்தூர் பன்னிமடை அருகேயுள்ள டாலியூரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்களிருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் இரு குழந்தைகளுடன் திருச்சி, திருவெறும்பூர் செல்வபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் ராஜ்குமார் 2021ல் வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டாராம். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி தனது தாயார் உதவியுடன், கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.இவரது மகள் அபிராமி (12) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், மே 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, இவரது தாயார் மகேஸ்வரி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மறுநாளே புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை காணாமல் போன சிறுமி போலீசாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. எனது மகள் காணாமல் போனது குறித்து மறுநாளே திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் இதுவரை போலீசார் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது குழந்தைக்கு என்னாச்சோ ?, ஏதாச்சோ? என தினமும் நான் பரிதவிப்புடன் இருந்து வருகிறேன். பணக்காரர் வீட்டு குழந்தைகள் காணாமல் போயிருந்தால் இந்நேரம் போலீசார் மெனக்கெட்டு குழந்தையை மீட்டிருப்பார்கள். ஆனால் நான் கடந்த 12 நாட்களாக இரவு பகல் பாராமல் காவல் நிலையத்திற்கும் வீட்டிற்கும் அலையோ அலையென அலைந்து திரிகிறேன். இதனால் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே எனது மகளை கண்டுபிடித்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்