தமிழக கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் பெயரில் கோவில்களில் அன்னதானம், சிறப்பு பூஜைக்கு தமிழக அரசு தடை என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (22.01.2024) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் நாளை தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் நாளை அன்னதானம், சிறப்பு பூஜை செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. அதுபோன்று எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. பொய்யான செய்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.