தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் கலை இலக்கிய திருவிழா…
திருச்சியில் வருகிற 19ம் தேதி நடக்கிறது...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் கலை இலக்கிய திருவிழா வருகிற 19ம் தேதி ( சனிக்கிழமை ) மாலை 4 மணியளவில் திருச்சி செயின்ட் ஜேம்ஸ் பள்ளியின் திறந்த வெளி அரங்கில் நடக்கிறது. இதில் “டாணாக்காரன்” திரைப்பட இயக்குனா் தமிழுடன், திரைக்கலைஞா் பிரகதீஸ்வரன் கலந்துரையாடுகிறாா். சினிமா…சினிமா… என்ற தலைப்பில் ராட்சசி, கழுவேத்தி மூா்க்கன் ஆகிய திரைப்படங்களின் இயக்குனா் கௌதம் ராஜ் பேசுகிறாா்.

வள்ளலாா் 200 என்ற தலைப்பில் தமிழறிஞா் கரு. ஆறுமுகத்தமிழனும், வைக்கம் 100 என்ற தலைப்பில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா எம்பியும், வெளிச்சக்கீற்று என்ற தலைப்பில் எழுத்தாளா் சு. வெங்கடேசன் எம்பியும், எங்கே போகிறோம் ? என்ற தலைப்பில் கவிஞா் நந்தலாலாவும் பேசுகின்றனா். கவிஞா் தமிழ்ஒளி எழுதிய பாடு பாப்பா என்ற நுாலை தமுஎகச பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான ஆதவன் தீட்சண்யா வெளியிட, வழக்கறிஞா் வி. ரங்கராஜன் பெற்றுக்கொள்கிறார்.பேராசிரியா் அருணன் எழுதிய பொதுசிவில் சட்டமா ? பிராமணிய சிவில் சட்டமா ? என்ற நுாலை அருட் தந்தை டி. யூஜின் அடிகளாா் வெளியிட, அலிஃப் டீ ஸ்டால் ஏ. இமாம்அலி பெற்றுக் கொள்கிறார்.
விழாவையொட்டி நாட்டுப்புற பாடல் புகழ் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினரின் நாட்டுப்புறப் பாடல்களும் , திருச்சி டிவைலைட் டேன்ஸ் குழுவினரின் திரை இசை நடனங்களும், திருச்சி கவின் கலைக்குழுவினரின் நாட்டுப்புற நடனங்களும் நடக்கின்றன. மேலும் இவ்விழாவில் பேச்சு, ஓவியம், கவிதை, குறும்பட போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு திரைப்பட நடிகை ரோகினி பரிசளித்து பேசுகிறாா். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.