Rock Fort Times
Online News

முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம்: யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்…!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டும், புதிதாக நியமிக்கப்பட்டும் வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் இருந்து பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

யார் இவர்?

விஜயின் ஆஸ்தான ஜோதிடரான இவர் ராஜராஜ சோழன், சேரன் செங்குட்டுவன், அசோக சக்கரவர்த்தி ஆட்சியை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் விஜய் சக்கரவர்த்தியின் ஆட்சியை பார்ப்பீர்கள். அவர் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவார், பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னவர். அதோடு இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வர் ஆவது உறுதி என்று அடித்துக் கூறியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இவர்தான் ஆஸ்தான ஜோதிடராக இருந்துள்ளார். விஜயின் வெற்றியை சரியாக கணித்த இவருக்கு தற்போது அரசு பணி கிடைத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்