திருச்சி கிழக்கு தொகுதி, மலைக்கோட்டை பகுதி த.வெ.க.சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா…!
திருச்சி கிழக்கு தொகுதி, மலைக்கோட்டை பகுதி த.வெ.க.சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க பொறுப்பாளர் தர்கா எஸ்.சௌகத்
முன்னிலையிலும், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையிலும், மலைக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட 16-வது வட்ட செயலாளர் ச.கோபிநாத் மற்றும் கழக நிர்வாகிகளின் சார்பில், 16- வது வார்டு தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.டி.நிர்மல், நாகநாதர் செல்வ மகேந்திரன், மலைக்கோட்டை பகுதி இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் மாலதி மற்றும் பகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கழகதோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.