Rock Fort Times
Online News

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு- விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி?…

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மத்திய சென்னை, விருதுநகர், கடலூர்,திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தேமுதிக தலைமை இடம் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவது உறுதி என்று கூறப்படுகிறது.  ஏனென்றால், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போது மாணிக்கம் தாக்கூர் காங்கிரஸ் எம்பி ஆக உள்ளார்.  இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 70 ஆயிரத்து 883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கே கடந்த முறை தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அதிமுக- பாஜக கூட்டணியில் போட்டியிட்டு 3 லட்சத்து 16 ஆயிரத்து 329 வாக்குகள் பெற்றார். ஆகவே, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக நல்ல வாக்கு வங்கியை பெற்றுள்ளதால் இந்த தொகுதியில் விஜய பிரபாகரன் களம் இறக்கப்படலாம் என் றே தெரிகிறது. ஆனால் தேமுதிக சார்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்