தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்காக திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை அதிமுக திருச்சியில் இருந்து வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வண்ணங்கோவில் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர் பி.தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டு தகுந்த ஆலோசனை கூறினர். அப்போது திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன் மு.பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினீயர் இப்ராம்ஷா, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், எம் ஜி..ஆர் மன்ற மாவட்ட செயலாளர் கலிலுல் ரகுமான், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஞானசேகர்,வர்த்தக பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் டிபன்கடை கார்த்திகேயன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் தேவா, பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,சுரேஷ் குப்தா, நாகநாதர் பாண்டி, ரோஜர் ,வட்டச் செயலாளர்கள் இன்ஜினியர் ராஜா, வசந்தம் செல்வமணி ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் மார்ச் 24-ந் தேதி நடைபெறும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கோவையில் நடந்த பிரதமர் “ரோடு ஷோ” நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி மேடைகள் தோறும் புகழ்ந்து பேசி வருகிறார். ஆனால் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா உள்ளிட்டோரை அவதூறாக பேசி வருவதை பிரதமர் ஏன் கண்டிக்கவில்லை . தமிழகத்தில் முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்காமல், அதிமுக நேரடியாக களம் காண வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். இருப்பினும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் இது. மேலும் தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறியும், தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தும் வாக்குகள் சேகரிப்போம். பா.ம.க. தற்போது பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதற்கான பலனை அனுபவிப்பர். அதிமுக பலமுறை கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. வரலாறும் அதுதான். அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டவன் நான், ஜெயலலிதாதான் எனது தெய்வம், எந்த காலத்திலும் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாடை எடுக்க மாட்டேன் என கூறி வந்த ஓபிஎஸ் தற்போது இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றதும், சின்னத்தை முடக்குங்கள் எனக்கூறுகிறார். இதிலிருந்து அவர் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்பது தெரிகிறது. தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக அசைக்க முடியாத, அசுர பலம் கொண்டது. இது தேர்தல் முடிவில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.