Rock Fort Times
Online News

குடிநீர் கலங்கலாக வருவதாக குற்றச்சாட்டு: திருச்சி மேயர் ஆய்வு…!

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்- 5, வார்டு எண் 11 உறையூர் சோழராஜபுரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் மேயர் மு.அன்பழகன் , உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆணையர் சதீஷ்குமார், கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் மற்றும் சுகாதார அலுவலர் இளங்கோவன், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
முன்னதாக இப்பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், அப்பகுதி பொதுமக்கள் மேயரிடம், குடிநீர், கலங்கலாக வருவதால் அதனை குடிக்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவதாக தெரிவித்தனர். உடனடியாக மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில் சோழராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வீடு வீடாக சென்றும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்