திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த குமார் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 19). இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனது உறவினர் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். அப்போது அவர் மாடியில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கைப்பிடி சுவர் இடிந்ததில் கீழே விழுந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.