பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காக 7 வீரர்களை மருத்துவக் குழு தகுதி நீக்கம் செய்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.