மின்னணு சாதனத்தை பிரித்துப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் ‘ஷாக்’- உள்ளே ரூ.1கோடி தங்கம்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சென்னை, மும்பை கோவா, திருவனந்தபுரம் போன்ற உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயங்குகின்றன. அந்தவகையில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த மின்னணு சாதனத்தை பிரித்துப் பார்த்தபோது அதிகாரிகள் ‘ஷாக்’ ஆனார்கள்.
அதில் 1,666 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1.19 கோடி இருக்கும் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். இதையடுத்து, அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.