திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு, அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை.
மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில், திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் கொரடா மனோகரன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.