திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
இதில், சிதம்பரம் தொகுதியில் கட்சியின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த தொகுதியில் அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.எஸ் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.