Rock Fort Times
Online News

2026-ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தான் ! திருச்சியில் தமிழ்மகன் உசேன் ஆருடம் !

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எடத்தெரு அண்ணா சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசும் போது.,அண்ணா வளர்த்த திமுக இப்போது இல்லை. அண்ணாவின் பிறந்தநளை கொண்டாடும் தகுதியுடைய ஒரே கட்சி அதிமுக தான். ரம்ஜான் நோன்புக்கு பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி, ஜெருசலேம், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், என சிறுபான்மையினருக்கான அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளித் தந்தது அதிமுக ஆட்சிதான். இதனை திமுகவில் உள்ள சிறுபான்மையினரே ஒப்புக்கொள்வார்கள். எம்.பி தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு வந்திருந்தாலும் 2026ல் அதிமுக வெற்றி பெறும். இரட்டை இலைக்கு வாக்களிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் காத்திருக்கின்றனர். அதனால், 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் என்றார்.  இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், தலைமைக் கழக பேச்சாளர் ஏழுமலை, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், நிர்வாகிகள் கே.சி பரமசிவம், ஜாக்குலின், வனிதா, பத்மநாபன், பூபதி, புத்தூர் ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, தென்னூர் அப்பாஸ், இலியாஸ், வெங்கட் பிரபு, சகாபுதீன் வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி,வரகனேரி சசிகுமார், நிர்வாகிகள ஆரி, பொம்மாசி பாலமுத்து, ரஜினிகாந்த், வாசுதேவன்,தர்கா காஜா, எடத்தெரு பாபு, ஆசைத்தம்பி, பாலக்கரை ரவீந்திரன்,பரத் குமார், நிர்வாகிகள் வசந்தம் செல்வமணி, மார்க்கெட் பிரகாஷ், பாலக்கரை ரவீந்திரன்,எனர்ஜி அப்துல் ரகுமான், ஜெயக்குமார், கண்ணன்,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, வாழைக்க்காய் மண்டி சுரேஷ், ஐடி நாகராஜ், பீமநகர் சீனிவாசன், அம்மன் கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பன், காசிபாளையம் சுரேஷ்குமார், ஆவின் குணா, நாட்ஸ் சொக்கலிங்கம்,இன்ஜினியர் ரமேஷ்,கல்லுக்குழி முருகன், உடையான் பட்டி செல்வம், நத்தர்ஷா,சையது ரபி,டைமன் தாமோதரன்  ,எடத்தெரு எம்.கே.குமார்,புது தெரு சரவணன் பிரகாஷ், நத்தர்ஷா,கட்பீஸ் ரமேஷ்,கயிலை கோபி,ஜோசப் செபா , ஈஸ்வரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்