Rock Fort Times
Online News

மே 3-ம் தேதி நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று (26.04.2026) வெளியாக வேண்டிய ஹால் டிக்கெட், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு இன்று வெளியாகி உள்ளது. மாணவர்கள், தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு வருகிற மே 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்