Rock Fort Times
Online News

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

தமிழகத்தில்இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ளன. வருகிற 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாகும். மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக
திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், முஸ்தபா, வட்டக் கழக செயலாளர்கள், மாணவரணியினர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 25ம் தேதி திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்துவது. திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்