திருச்சி மண்டல ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் இயக்குனா் கர்னல் தீபக்குமாா் செய்தியாளா்களை சந்தித்தாா்.அப்போது அவா் ராணுவத்தில் ஆள் சோ்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. வருகிற மாா்ச் 15ம் தேதி வரை ஆா்வமுள்ளவா்கள் தங்களது ஆதாா் காா்டு மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ண்பிப்பவா்களுக்கு நேரடியாக உடல் தகுதி தோ்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவுத்தோ்வு நடத்தப்படும்.திருச்சி மண்டலத்தை பொறுத்தவரை திருச்சியில் இரண்டு இடங்களிலும் திருநெல்வேலியில் மூன்று இடங்களிலும் பொது நுழைவுத்தோ்வு நடைபெறும். இதற்கு நுழைவுத் தோ்வு கட்டணம் 500 ரூபாய் என்றும் இதில் 250 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும் என்றும் 50 சதவிகித செலவை ராணுவம் ஏற்கும் என்றும் தொிவித்தாா். இந்த தோ்வானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டும் நடைபெறும் என்றும் கூறினாா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.