Rock Fort Times
Online News

யார் தயவால் வெற்றி பெற்றோம்…* சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கே.என்.நேரு வார்த்தை மோதல்…!

இரண்டு நாட்கள் வார விடுமுறைக்குப், பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று(24-08-2026) மீண்டும் கூடியது. சட்டப்பேரவையில் விவாதத்தின் போது, “எங்களது பாரத் ஜோடோ யாத்திரையால் தான் தி.மு.க-வுக்கு இத்தனை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கிடைத்தனர்” என காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் பேசினார். இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்ற திமுக உறுப்பினருமான கே.என்.நேரு,
“இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை நடந்தது, ஏன் அங்கு காங்கிரஸ் வெற்றி பெறவில்லை? தமிழ்நாட்டில் மட்டும் 10 இடங்களில் காங்கிரஸ் எம்.பி.க்களை வெற்றி பெற வைத்தது தி.மு.க தான்” என்று அழுத்தமாகப் பதிலடி கொடுத்தார். இதேபோல, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், தற்போதைய ஆட்சியில் சபாநாயகர் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து
கொள்வதாகப் பாராட்டு தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த அப்பாவு எதிர்கட்சி பக்கம் திரும்பக் கூட மாட்டார் எனக் குறிப்பிட்டார். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, கடந்த ஆட்சியில் கொறடாவாக இருந்த வேலுமணி அதிமுக உறுப்பினர்கள் பலருக்குப் பேச வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர். அவர் இப்படி பேசலாமா? என்று கேட்டார். திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த அப்பாவு எதிர்கட்சியை எவ்வாறு நடத்தினார் என்பதை நாடே அறியும் என அமைச்சர் செங்கோட்டையன் தனது கருத்தைப் பதிவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்