2024 நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் வேணுகோபால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணனை தமிழ்நாட்டின் காங்கிரஸ் விளம்பர குழு உறுப்பினராக நியமித்துள்ளார். இதற்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, செயல் தலைவர் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், ஆகியோருக்கு வக்கீல் சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.
விளம்பரக்கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சரவணனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.