தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். இவர் மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். நடிகர் சத்யராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். மகள் திவ்யா, பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அரசியல், சமூக விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். இந்தநிலையில் திவ்யா, அண்மையில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப அணியின் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் திவ்யாவுக்கு திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Comments are closed.