நீலகிரி பந்தலூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று சரிதா என்ற பெண்ணை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(29-12-2023) சரிதா உயிரிழந்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.