திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நெ.2 கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுமித்ரா(30). இவர் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை தனது குழந்தைகளுடன் நெ 2 கரியமாணிக்கம் பகுதியில் சுமித்ரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென சுமித்ரா கழுத்தில் , அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்ப முயன்றார். அப்போது சுமித்ரா , கூச்சல் போட்டதால் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து வாத்தலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாண்டியபுரம் குடித் தெருவை சேர்ந்த 31 வயதான செல்வக்குமார் என தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்து ஆசிரியையிடம் ஒப்படைத்தனர்.

https://argrathi.stars.ne.jp/
திரà¯à®à¯à®à®¿ à® à®°à¯à®à¯ நà®à®¨à¯à®¤à¯ à®à¯à®©à¯à®± à®à®à®¿à®°à®¿à®¯à¯à®¯à®¿à®à®®à¯ 7 பவà¯à®©à¯ தாலிà®à¯ à®à®à¯à®à®¿à®²à®¿à®¯à¯ பறிதà¯à®¤ வாலிபரà¯à®à¯à®à¯ தரà¯à®® à® à®à®…